நான் ரொம்ப பிசி ஐஸ்வர்யா

தர்மதுரை படத்திற்கு பிறகு கட்டப்பாவை காணோம், மோ, கடலை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், முப்பரிமாணம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இதுதவிர இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உள்ள சில மேல்தட்டு நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறார் அவர். இந்த நிலையில், அமீர் இயக்கத்தில்
ஆர்யா நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷைக்கேட்டால், அந்த படத்தில் நான் நடிப்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்கிறார். மேலும், தமிழில் மட்டுமின்றி தற்போது மலையாள படங்களிலும் நடிப்பதால் நான் பிசியாக இருக்கிறேன். அதனால் அவர் கால்சீட் கேட்கும்போது என்னிடம் கால்சீட் இருந்தால்தான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பதே தெரியும். அதோடு, என்னிடம் அந்த படத்தில் நடிப்பது பற்றி கேட்டவர்கள் இன்னும் கதை பற்றியோ, சம்பளம் பற்றியோ எதுவும் பேசவில்லை. அதனால், அவர்கள் முழுமையான பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் நான் ஆர்யா படத்தில் நடிக் கிறேனா? இல்லையா? என்பது உறுதியாகும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget