நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில்,செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு
செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம் பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் பார்டர் அமைக்க விரும்பும் செல் அல்லது செல்வரிசையை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவிலிருந்து Cells என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் Border டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸில், Border என்னும் பிரிவில், நீங்கள் எந்த இடத்தில் பார்டர் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Outline என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், செல் முழுவதுமாக பார்டர் அமைக்கப்படும்.
5. Style பிரிவில், எந்தவிதக் கோட்டில் பார்டர் அமைக்கப் பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழியும் உள்ளது. டூல்பாரில் உள்ள Borders என்னும் டூலைப் பயன்படுத்தியும் பார்டர் கோடுகளை அமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி, இந்த டூலைப் பயன்படுத்த வேண்டும்.
1. பார்டர் அமைக்கப்பட வேண்டிய செல் அல்லது செல் வரிசையத் தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் அமைக்க விரும்பும் பார்டர் வகை பார்டர்ஸ் டூலில் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். இத்துடன் உங்கள் வேலை முடிந்துவிடும். இல்லை எனில், இங்கு குறிக்கப்பட்டுள்ளபடி தொடரவும்.
3. பார்டர்ஸ் டூலின் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்திடவும். பலவகையான பார்டர் வகைக் கோடுகள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்டர் வரியைத் தேர்ந்தெடுக்கவும். அவுட்லைன் பார்டரைப் பயன்படுத்தி, நீங்கள் அமைக்க விரும்பும் செல் வரிசையைத் தேர்ந்தெடுக்கலாம். இது பார்டர் கட்டத்தில், கீழாக வலதுபுறம் கிடைக்கும்.
பார்டர் கோடுகளை செல் அல்லது செல் வரிசைகளில் அமைக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும், இவற்றை நீக்க விரும்பினால், மிக எளிய வழி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. கண்ட்ரோல் கீயுடன், அண்டர் ஸ்கோர் கீயை (underscore) அழுத்த வேண்டும் (Ctrl+_) அமைக்கையில் ஷிப்ட் கீயையும் அழுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்). செல்களில் உள்ள பார்மட் கூறுகளில், பார்டர்கள் மட்டுமே, இந்தக் கட்டளையால் நீக்கப்படும். மற்றவை அப்படியே இருக்கும்.
பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட
எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம்.
இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இட து பக்கம் காட்டும்படி அமைக்கலாம்.
Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க்ஷீட் மேலாக, சுருக்கமாக properties காட்டும்.
2. அடுத்து Document Properties ஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.