தமன்னா வழியில் ஐஸ்வர்யா

தமிழ், மலையாளம், இந்தி என தற்போது 10 படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சில படங்களில் சிங்கிள் நாயகி என்றபோதும், பல
படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தான் நடிக்கிறார். அதோடு, அட்டக் கத்தி, காக்கா முட்டை, ரம்மி, தர்மதுரை படங்களைப்போன்று குடும்பப்பாங்கான வேடங்களாகத்தான் நடித்து வருகிறார். ஹோம்லியான வேடங்களே அவ ருக்கு வெற்றியை கொடுத்திருப்பதால் அவரை அந்த கோணத்திலேதான் டைரக்டர்களும் நடிக்க வைக்கின்றனர்.

ஆனால், சென்னை சிட்டியில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், நிஜத்தில் ரொம்ப மாடர்னான பெண். கலைஞர் டிவியில் இடம்பெற்ற மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் படுகவர்ச்சியாக உடையணிந்து நடனமாடியவர். அந்த வகை யில், சினிமாவிலும் கிளாமராக நடிக்க அவர் ரொம்ப ஆர்வமாகவே உள்ளார். ஆனால் தினேசுடன் நடித்த திருடன் போலீஸ் படத்தில்தான் மிதமான கிளாமராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு நடித்ததெல்லாமே ஹோம்லியான வேடங்கள்தான்.

இந்த நிலையில், தற்போது மா.கா.பா.ஆனந்துடன் நடித்து வரும் கடலை படத்தில் இதுவரை நடிக்காத அளவுக்கு பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுமட்டுமின்றி, நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான அவருக்கு, படத்துக்குப்படம் அதிரடி நடனமாட வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாம். அதனால் கடலை படத்திற்கு பிறகு தனக்கு தமன்னா நடிப்பது போன்ற கிளாமரான கதாநாயகி வேடங்களை வரவைக்க வேண்டும் என்கிற ரீதியில் கடலையில் கவர்ச்சி காட்டி அதிரடி நடனமாடிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget