30 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது மனித இனம்

அமெரிக்காவின் மிசவுரி பல்கலைகழக பேராசிரியர் கேரல் வார்டு தலைமையில் மனித இனம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், உலகின் மிக பழமையான மனித மூதாதையர்கள் என ஹோமோ எரக்டஸ் இனம் கருதப்பட்டது. அவர்கள் வாழ்ந்த காலம் 1.8 மில்லியன் முதல் 70 ஆயிரம் வருடங்களுக்கு இடைப்பட்டவை ஆகும். தற்போது எத்தியோப்பியா நாட்டில் மனித கால் எலும்பு ஒன்று புதைபொருளாக கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வில்
அதன் காலம் 3.2 மில்லியன் வருடங்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது கடந்த 1974-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட லூசி என்ற பெயரிடப்பட்ட எலும்பு கூடுடன் பொருந்துகிறது. மேலும் அந்த இனம் ஆஸ்டிராலொபிதிகஸ் அபாரென்சிஸ் வகையை சேர்ந்தது. மரத்திலிருந்து கீழிறங்கி தரையில் கால் பதித்து நடப்பதற்கு ஏற்ற கால் எலும்புகள் மற்றும் பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றை நன்கு கடித்து உண்பதற்கு ஏற்ப அமைந்த பெரிய தாடைகள் ஆகியவை இந்த இனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். எனவே இதனடிப்படையில் பார்க்கும் போது, மனித இனத்தின் மூதாதையர்கள் சுமார் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க கூடும் என பேராசிரியர் கேரல் தெரிவித்துள்ளார்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget