சர்வதேச நாடுகள் பற்றி பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் தகவல் திரட்டிகள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவீடனின் ஸ்டாக்ஹோம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைந்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட்
படத்தில் வரும் பிரமாண்ட செட் மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. பெரிய குகை போல் காணப்படும் இந்த தகவல் மையம் கிரானைட்டை குடைந்து கட்டப்பட்டுள்ளது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் ஆகியவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன. மேலும் செயற்கையான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த உயிருள்ள செடிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைந்துள்ளன. விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கிறது.