கட்டற்ற கலைக்களஞ்சியம் எனப் புகழப்படும் விக்கிப்பீடியாவின் பெருமையே அது தடைகளற்றது என்பது தான். அதில் பங்களிக்க விரும்பும் எவரும் பயனர் கணக்குடனோ, பயனர் கணக்கு இல்லாமலோ தாம் விரும்பிய துறையில் தகவல் அளிக்கலாம். இந்தக் கட்டற்ற தன்மை விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
உயிருடன் வாழ்பவர் குறித்த தகவல்களும் சில சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் தலைப்புகளும் இனி மட்டுறுத்தலுக்கு உட்பட்டே அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. விக்கிப்பீடியாவில் பதியப்பெறும் ஒவ்வோர் எழுத்தும் அழிக்கப்படுவதே இல்லை என்று அது கூறுகிறது. இதனால் எவரேனும் தகவல்களை அழித்தாலோ, கையாடல் செய்தாலோ அது பிழையின்றி மீட்கப்படும் அதனாலேயே கட்டுப்பாடு தேவைப்படவில்லை என வாதித்து வந்தது.