சிக்கன் பால்ஸ்
சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்
சிக்கன் கொத்தியது – 1/4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
முட்டை – 1
ரொட்டித் துண்டு – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணை – பொரிப்பதற்கு
செய்முறை
* கொத்திய கோழி இறைச்சியை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* பிறகு மிக்சியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்.
*
வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.* இதனுடன் சிக்கன் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு இறுக்கமாக பிசையவும்.
* இந்தக் கலவையை கோலியளவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
* ரொட்டியைச் சதுரமாக சிறிய க்யூபாக வெட்டிக் கொள்ளவும்.
* சிக்கன் உருண்டைகளை ரொட்டித் துண்டில் வைத்து ரோல் செய்யவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சிக்கன் பால்சை பொரித்தெடுக்கவும்.