315 பேர் உயிரைக் குடித்த நாற்காலி!

மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. வழக்கமாக

மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அதில் முக்கியமானது, “ஓல்ட் ஸ்பார்க்கி’ எனப்படும் மின்சார நாற்காலி. மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளை, இந்த நாற்காலியில் உட்கார வைத்து, மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விடுவர். இவ்வாறு, இந்த நாற்காலியில், 315 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில், மூன்று பேர் பெண்கள். 1897 முதல், 1963ம் ஆண்டு வரை, இந்த நாற்காலி பயன்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த, 1930ல், ஒரு முறை இந்த நாற்காலி, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் பின், 80 ஆண்டுக்குப் பின், இப்போதுதான் பொது மக்கள், இந்த மரண நாற்காலியை பார்வை யிட்டுள்ளனர்.
ஓகியோ மாநிலத் தில், 1897ம் ஆண்டு வரை, மரண தண்டனை கைதிகளை தூக்கில் போட்டு சாகடித்தனர். அதன் பின், இந்த நாற்காலி நடைமுறைக்கு வந்தது. 1963ம் ஆண்டுக்குப் பின், விஷ ஊசி போட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2002ல், இந்த நாற்காலி, ஓகியோ வரலாற்று மையத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இன்னொரு பயங்கரமான பொருள், மரக் கூண்டு. மன நிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த சிறிய கூண்டில் போட்டு, அடைத்து வைத்தனராம்.
ஆட்டுத் தோலால் ஆன, 150 ஆண்டுகள் பழமையான காண்டம், குழந்தைகள் தங்கள் பெரு விரல்களை கடிப்பதை தடுக்க பயன்படுத்தப்படும் அலுமினியம் குப்பி போன்ற வையும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை பார்வையிட, சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget