உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற ?

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம்.



உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம். கையெழுத்தை பொண்டாக மாற்றித் தருகிறது
எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.

கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம்.

அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.


சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும். கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில்  எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள்.


Downloads:


 அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

என்னுடைய கையெழுத்து (தலையெழுத்து மாதிரியே) மோசமாக அமைந்து விட்டதால் நான் இதனைப் பரீட்சித்துப் பார்க்க வில்லை. நீங்கள் ஒரு முறை முயன்று பாருங்கள்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget