
Back to Top பட்டனை எப்படி வைப்பது?
1. முதலில் Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
குறிப்பு: Add a Gadget இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை செய்யலாம். ஏற்கனவே நீங்கள் HTML/JavaScript gadget வைத்திருந்தால் அதில் சேர்ப்பது நல்லது.
3. பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Back To Top.
Content என்ற இடத்தில் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
இனி உங்கள் ப்ளாக்கின் கீழே Back To Top பட்டன் காட்சி அளிக்கும்.
Code-ல் மாற்றம் செய்வதற்கு:
**மேலே உள்ள Code-ல் நீல நிறத்தில் உள்ள Back to Top என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு "மேலே செல்ல"
**மேலே உள்ள Code-ல் சிகப்பு நிறத்தில் உள்ள
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPZz9gr8N7Ui-54fBw7Ae1In_8peQd_MTGc2v7FrYIM1V6e8A_E_N9NP9OdGdGk_dVlYFKCrmiSW9PgGowkpTaJotkeVg_KhEC63CrHWE_9B1EjRvdhdWQuphYBMN8q4bXsD9PAznh6tE/s1600/scroll+to+top.png
என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான படத்தின் முகவரியை (Image URL) கொடுக்கலாம்.
**மேலே உள்ள Code-ல் bottom:5px;right:5px; என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு,
*கீழிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற bottom:5px; என்பதில் 5 என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.
* வலது பக்கத்திலிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற right:5px; என்பதில் 5என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.
** பட்டன் இடது பக்கம் தெரிய வேண்டுமானால், right என்பதற்கு பதிலாக left என்று மாற்றிக் கொள்ளவும்.
உங்களுக்காக சில பட்டன்கள்:















