
இதற்காக புரோகிராமிங்கோ எஹ் டி எம் எல் அறிவோ அவசியம் இல்லை. இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும்.மற்றதை கபாபா இணையதளம் பார்த்துக்கொள்கிறது.
இணையத்தில் உலாவினால் மட்டும் போதுமா அதில் பங்கேற்க வேண்டாமா என்று கேட்கும் இந்த இணையதளம் நீங்களே சொந்தமாக இணையதளம் வடிவமைத்துக்கொள்ள உதவி செய்கிறது.
சொந்தமாக இணையதளத்தை வடிவமைத்துக்கொள்ள தேவைப்படும் எந்த விதமான தொழில்நுட்ப சுமையும் இல்லாமலேயே சுலபமாக இணையதளத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
நீங்கள் விரும்பு எந்த வகையான இணையதளத்தையும் வடிவமைத்துக்கொள்ள தேவையா அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய சேவையை இது வழங்குகிறது. ஒரு சில கிளிக்குகளில் மிகச்சுலபமாக இணையதளத்தை வடிவமைத்து விடலாம் என்று இந்த தளம் உறுதி அளீப்பது போலவே மூன்றே கட்டங்களில் உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொண்டு விடலாம்.
மற்ற சேவைகளைப்போல விளம்பரங்களால் தளத்தை போட்டு நிரப்புவதில்லை என்று கூறுவதோடு விரும்பும் முகவரியை பயன்படுத்தும் வசதியையும் தருவதாக தெரிவிக்கிறது. வலைப்பதிவுகளை பயன்படுத்தி அலுத்துப்போனவர்கள் முயற்சித்துப்பார்க்கலாம்.