சி.டி. வேகம்

சி.டி. ஒன்றில் டேட்டாவினை எழுதுகையில், நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், அதில் எவ்வளவு வேகத்தில் எழுதப்பட வேண்டும் என ஒரு ஆப்ஷன்
கேட்கப்படும். எவ்வளவு வேகம் வைக்கலாம் என்பதனை எப்படி முடிவு செய்வது?
உங்களுடைய சிடி ரைட்டரின் அதிக பட்சம் வேகம் எவ்வளவு என்று பாருங்கள். அதைக் காட்டிலும் சற்று குறைவான வேகம் செட் செய்வதே நல்லது. அதிக பட்ச வேகம் வைத்தாலும் தகவல்கள் எழுதப்படும். 
ஆனால் நிறைய பபர் ரன் எர்ரர் வாய்ப்புண்டு. அதாவது எழுதப்படும் வேகத்திற்கு டேட்டா, சி.டி. ரைட்டருக்குக் கிடைக்காமல், எழுது வதற்கு இடையூறு தரப்படும். 
மேலும் அப்போது இயங்கும் மற்ற புரோகிராம்களினாலும் சிக்கல் ஏற்படலாம். எனவே மிகவும் குறைவாக இல்லாமலும் அதிக பட்ச வேகம் இல்லாமலும், மிதமாக இருப்பதே நல்லது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget