சில வெப்சைட்டுகளின் எழுத்து வகை மிகவும் சிறியதாக இருக்கும். நாம் பார்க்கையில் இது கண்களுக்கு எரிச்சலைத் தரலாம். வெப்சைட் பக்கங்களை எளிதாகப் பெரிய எழுத்துக்களில் காண கண்ட்ரோல் மற்றும் + கீகளை அழுத்தவும். இதே பக்க எழுத்து அளவைக் குறைத்திட கண்ட்ரோல் + மைனஸ் அடையாளக் கீயினை அழுத்தவும்.
* புதிய டேப் ஒன்றை எந்த தளமும் இல்லாமல் திறக்க CTRL +T அழுத்தவும்.
* வெப்சைட்டில் ஏதேனும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுக்கபட்டிருந்தால் அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று மவுஸின் வீலை அழுத்தினால் அந்த தளம் புதிய டேப்பில் திறக்கப்படும்.
* ஒரு வெப்சைட் தளத்தை மூட CTRL+W அழுத்தவும். அவ்வாறு மூடிய தளத்தை மீண்டும் உடனே பெற வேண்டுமாயின் Ctrl+Shft+T கீகளை அழுத்தவும்.
* வெப்சைட்டின் பக்கம் ஒரு திரையைத் தாண்டி கீழாகச் செல்கிறதா? கீழே சென்று பார்க்க வேண்டுமா? ஜஸ்ட் Space bar தட்டவும். கீழே போன பின் மீண்டும் அப்பக்கத்தின் மேல் பகுதிக்குச் செல்ல வேண்டுமா? shft + space bar தட்டவேண்டும். லொகேஷன் பாருக்கு கர்சரைக் கொண்டு சென்று வேறு சைட்டுகளின் முகவரியை அமைக்க வேண்டுமா? அல்லது வேறு தேடல்களை மேற்கொள்ள வேண்டுமா? கர்சரை அட்ரஸ் பார் அல்லது லொகேஷன் பாருக்குக் கொண்டு செல்ல CTRL + L அழுத்தவும். இதே போல சர்ச் பாக்ஸ் கொண்டு செல்ல CTRL + K அழுத்தவும். பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை ரெப்ரெஷ் செய்திட CTRL + R அழுத்தவும்.
* பிடித்த வெப்சைட்டுக்கான புக்மார்க்கினை ஏற்படுத்த லொகேஷன் பாரில் உள்ள ஸ்டார் ஐகானை ஜஸ்ட் ஒரு கிளிக் செய்தால் பார்த்துக் கொண்டிருக்கும் தள முகவரிக்கான புக் மார்க் அமைக்கப்பட்டுவிடும்.
* அவ்வப்போது நமக்குத் தேவையான வெப்சைட்டுகளைப் பார்க்கையில் அவற்றிற்கு புக் மார்க் ஏற்படுத்துகிறோம். இதனால் இந்த தளங்களைத் தேவைப்படுகையில் எளிதாகப் பெற முடிகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த பட்டியல் பெரியதாக வளர்கையில் அவற்றில் தேடிப் பெறுவதும் கடினமாகிறது. இதற்கும் ஒரு வழி உள்ளது. இந்த புக்மார்க்குகளுக்கு ஒரு டேக் அமைக்கலாம். டேக் என்பது ஏதேனும் குறிப்பிட்ட சொல்லை ஒரு தளத்திற்கு டேக் காக அமைத்துவிட்டால் பின்னர் அந்த டேக் காக அமைக்கப்பட்ட சொல்லை அட்ரஸ் பாரில் கொடுத்து தளத்தைப் பெறலாம். இதற்கு அந்த வெப்சைட்டிற்குச் சென்று ஸ்டார் ஐகானில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். உடனே அந்த வெப்சைட்டிற்கான டேக் தரச் சொல்லி கேட்கும். அந்த தளம் நினைவிற்கு வரும் வகையில் ஏதேனும் சொற்களை அமைக்கலாம். ஒரு தளத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட டேக்குகளை த் தரலாம். ஒவ்வொரு டேக் சொல்லுக்கும் இடையே கவனமாக கமா இட வேண்டும். அந்த சொல்லும் அந்த தளம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக தினமலர் இணைய தளத்திற்கு நீங்கள் டேக் கொடுப்பதாக இருந்தால் ”news” என்றோ அல்லது “malar” என்றோ கொடுக்கலாம். இந்த சொற்களை வேறு தளத்திற்கும் கொடுக்கலாம். கொடுத்தபின் இந்த டேக் சொல்லை அட்ரஸ் பாரில் டைப் செய்து கிளிக் செய்தால் இந்த சொல்லை டேக்காகக் கொடுத்த அனைத்து தளங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.
* பயர்பாக்ஸ் பிரவுசரின் தனித்தன்மையே அதற்கான ஆட்–ஆன் எனப்படும் வசதிகளைக் கூட்டித் தரும் புரோகிராம்கள்தான். இவற்றை யார் வேண்டுமானாலும் உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கலாம். அவற்றைத் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். இது போன்ற பயர்பாக்ஸ் ஆட்–ஆன் புரோகிராம்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இவற்றின் மூலம் பயர்பாக்ஸ் தொகுப்பினை உங்கள் வசதிக்கேற்றபடி இயக்கலாம். இவை குறித்து அறிய Tools கிளிக் செய்து பின் Add ons தேர்ந்தெடுத்து அதில் கிடைக்கும் Add ons Manager என்பதைத் திறக்கவும். இதிலிருந்து ஆட் ஆன் புரோகிராம்கள் ம்குறித்து நிறைய அறிந்து கொள்ளலாம்.
சர்ச் இஞ்சின் வகைப்படுத்த
பயர்பாக்ஸ் பிரவுசர் உள்ளேயே சர்ச் இஞ்சின் ஒன்று தரப்பட்டுள்ளது. அதனை நீங்கள் விரும்பும் எந்த சர்ச் இஞ்சினுக்காகவும் வகைப்படுத்தி வைக்கலாம். சர்ச் பாரின் இடது பாருக்கு அருகே உள்ள சர்ச் இஞ்சின் ஐகானில் கிளிக் செய்திடவும். அதில் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது Manage Search Engines கிளிக் செய்து சர்ச் லிஸ்ட்டை வகைப்படுத்தலாம். உங்களுக்குப் பிரியமான சர்ச் இஞ்சினுக்கு ஷார்ட் கட் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக கூகுள் தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் எ என டைப் செய்வதன் மூலம் அதனைப் பெறலாம். இதன் பின் கூகுள் தளத்தில் சமையல் டிப்ஸ்களைத் தேட “G cookie recipes” என டைப் செய்தாலே போதும். கூகுள் தளம் நீங்கள் தேடும் சமையல் குறிப்புகள் உள்ள தளங்களைப் பட்டியலிடும்.
* பயர்பாக்ஸில் உள்ள Find As You Type கூடுதல் வசதி நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு வசதி ஆகும். வழக்கமாக நாம் ஒரு சொல்லை ஒரு வெப்சைட்டில் தேட “find” பார் சென்று சொல்லை அமைத்துத் தேடுவோம். இதற்குப் பதிலாக வெப்சைட் தளத்தின் எந்த இடத்திலும் கிளிக் செய்து நீங்கள் தேடவிரும்பும் சொல்லை டைப் செய்தால் போதும். உங்களுடைய கர்சர் அந்த சொல் இருக்கும் முதல் இடத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும்.
* தேடிய தடங்களை அழிக்க பயர்பாக்ஸ் எளிதான வழிகளைத் தருகிறது. பிரவுசிங் மற்றும் டவுண்லோட் ஹிஸ்டரியை மொத்தமாக ஒரு கிளிக் செய்து அழிக்க முடியும். Tools சென்று Clear Private Data அழுத்தவும். இன்னும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றால் “Always clear my private data when I close Firefox” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட வகை தேடல்கள் அல்லது புக்மார்க்குகளை மட்டும் தனிமைப்படுத்தி ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். இது பின் நாளில் நாம் தேடுகையில் நாம் தொகுத்து வைத்தவற்றை நமக்கு மொத்தமாக எடுத்துக் கொடுக்கும். Bookmark மெனுவில் “Organize Bookmarks” திறக்கவும். இதில் Library என்பதில் கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில் உங்களுடைய சர்ச் சொல்லை டைப் செய்திடவும். இங்கு உங்கள் புக் மார்க்குகளை வகைப்படுத்தும் பொதுவான சொல்லாக அது இருக்க வேண்டும். இப்போது பட்டியல் கிடைத்தவுடன் அப்படியே சேவ் பட்டனை கிளிக் செய்தால் போல்டர் திறப்பதற்கான வழிகளையும் அதில் இவற்றை சேவ் செய்திடும் வழி களையும் பெறலாம்.
டவுண்லோட்
நீங்கள் அடிக்கடி டவுண்லோட் செய்பவரா? நீங்கள் டவுண்லோட் செய்த புரோகிராம்களை எங்கு சேவ் செய்தோம்? அவற்றை என்ன செய்தோம் என்று பின் நாளில் மறப்பவரா? டவுண்லோட் மேனேஜர் மூலம் அவற்றைக் கண்டறியலாம். Tools – Downloads சென்று சர்ச் பாக்ஸில் அதற்கான சொல்லை டைப் செய்து டவுண்லோட் செய்த புரோகிராம் எங்கிருக்கிறது என அறிந்து எடுக்கலாம். அல்லது டவுண்லோட் மேனேஜர் தரும் லிஸ்ட்டிலிருந்து அந்த புரோகிராம்களை இயக்கலாம். அல்லது அந்த பட்டியலில் குறிப்பிட்ட டவுண்லோட் புரோகிராம் பெயரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Copy Download Link” கிளிக் செய்து பின் அந்த புரோகிராம் இருக்கும் தளம் செல்லலாம்.
2.A . உள்ளே நுழைய விடாதே….
இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் பலவற்றில் நமக்கு வேண்டாதவர்களிடமிருந்து வரும் இமெயில்களை வரவிடாமல் செட் செய்திடும் வசதி உள்ளது.இதனைப் பலரும் பயன் படுத்து வதில்லை. இப்படி ஒரு வசதி உள்ளதே ஒரு சிலருக்குத்தான் தெரிகிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
இவ்வாறு தடுக்கப்படும் வகையில் செட் செய்திடும் முகவரிகளில் இருந்து வரும் இமெயில்கள் உள்ளே வரவிடாமல் அழிக்கப்படுகின்றன. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இமெயில் தொகுப்பில் முதலில் Messages என்ற மெனுவில் கிளிக் செய்திடுங்கள். யாருடைய இமெயிலைத் தடுக்க வேண்டுமோ அந்த நபரிடமிருந்து வந்த இமெயில் செய்தி ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்தபடியாக Block Sender என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி இவரிடமிருந்து வரும் இமெயில்கள் அழிக்கப்படும். சரி, பின்னால் ஒரு நாளில் இவரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்க்க விரும்புகிறீர்கள். அல்லது தவறுதலாக தடுக்கப்பட வேண்டிய ஒருவரின் இடத்தில் இன்னொருவரின் இமெயிலைத் தடுத்துவிடுகிறீர்கள். இவர்களை இந்த தடுத்தலில் இருந்து ரிலீஸ் செய்வது எப்படி? Tools மெனு செல்லவும். அதன்பின் Message Rules, Blocked Senders என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
யாரிடமிருந்து வரும் இமெயில்களை மீண்டும் பெற விரும்புகிறீர்களோ, பட்டியலில் அந்த நபரின் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். பின் “remove“ என்ற பட்டனை அழுத்தவும். இப்போது தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மற்ற இமெயில் புரோகிராம்களிலும் இதே போன்ற வழிகள் தரப்பட்டிருக்கும். சில பில்டர் வழிகளைப் பயன்படுத்தி இருப்பார்கள். வேண்டாத வர் களை நுழையவிடாமல் தடுப்பது நல்லது தானே. தேவையற்ற வைரஸ்கள் வருவதையும் இதன் மூலம் தடுக்கிறோம் அல்லவா!