சாப்ட்மேக்கர் ஆப்பீஸ் 2008 மென்பொருளை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய


ஆப்பிஸ் பயன்பாடுகளை செய்ய அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மட்டுமே தற்போது ஆப்பிஸ் பயன்பாடுகள் செய்ய அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருள் விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும். சந்தையில் இலவசமாக பல்வேறு மென்பொருள் கிடைக்கிறன. குறிப்பாக ஸ்டார் ஆப்பிஸ், ஒப்பன்
ஆப்பிஸ் போன்ற மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன். ஆனால் இவை யாவும் இன்னும் அதிகமாக பிரபலம் ஆகவில்லை. இதற்கு காரணம் எம்.எஸ்.ஆப்பிஸ் மேல் உள்ள மோகம் மட்டுமே ஆகும். மேலும் இதனுடைய சிறப்பம்சமும் இந்த மென்பொருளில் உள்ள வசதியும் மட்டுமே ஆகும். இன்னும் பல்வேறு இலவசமான ஆப்பிஸ் மென்பொருள்கள் சந்தையில் இலவசமாக கிடைக்கிறன. அந்த வகையில் Softmaker Office 2008 பதிப்பை தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் வழங்குகிறனர்.


மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய : சுட்டி




சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் நாட்டினை குறிப்பிட்டு. எந்த இயங்குதளத்திற்கு மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து Submit பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும். அந்த லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ள முடியும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.







இந்த மென்பொருளை பயன்படுத்தி ஆப்பிஸ் வேலைகளை எளிமையாக செய்ய முடியும். தோற்றத்தில் எம்.எஸ்.ஆப்பிஸ் போன்றே இருக்கும். ஆனால் ஒருசில மாறுதல்களும் இவற்றில் உண்டு. இந்த மென்பொருள் குறுகிய காலம் மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget