வேர்ட் டிப்ஸ்-டாகுமெண்ட்டில் எழுத்தைப் பதிக்க


நீங்கள் தயாரித்த டாகுமெண்ட் ஒன்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், டாகுமெண்ட்டில் உள்ள எழுத்து வகையினை, வேறு ஒரு கம்ப்யூட்டரில், மற்றவர்களால் பயன் படுத்தப்பட நீங்கள் விரும்பினால், டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிக்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் embed என்று சொல்வார்கள். நாம் உருவாக்கிய டாகுமெண்ட்டில்
பயன்படுத்தப்பட்ட எழுத்து வகை, இன்னொரு கம்ப்யூட்டரில் இல்லை என்றால், விண்டோஸ் அதற்கு இணையாக உள்ள வேறு ஒரு எழுத்தினைப் பயன்படுத்தும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த தாக்கத்தினை டாகுமெண்ட் ஏற்படுத்தாது. இதற்கான தீர்வு டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிப்பதே. எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்து பவராக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ள செட்டிங்ஸை ஏற்படுத்தவும்.
1. Tools மெனுவிலிருந்து Options பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options dialog box–ஐக் காட்டும்.
2. இங்கு காட்டப்படும் விண்டோவில் உள்ள Save டேப்களில் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது கிடைக்கும் கட்டத்தில் உள்ள பல பிரிவுகளில் Embed TrueType Fonts என்று இருப்பதன் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
4. ஒருகுறிப்பிட்ட எழுத்து வகையில் சில கேரக்டர்களை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால், Embed Characters In Use Only என்ற வரியின் முன் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
5. டாகுமெண்ட்டில் இடத்தினை சேவ் செய்திட, Do Not Embed Common System Fonts என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
7. வழக்கம்போல டாகுமெண்ட்டை உருவாக்கி சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டன் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட், Word Options என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Save என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Embed Fonts in the File என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
4. நீங்கள் குறைந்த அளவில் கேரக்டர்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், Embed Only the Characters Used in the Document என்ற பாக்ஸில் டிக் செய்திடவும்.
5. டாகுமெண்ட்டில் இடத்தினை சேவ் செய்திட, Do Not Embed Common System Fonts என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
7. வழக்கம்போல டாகுமெண்ட்டை உருவாக்கி சேவ் செய்திடவும்.
ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு எழுத்து வகைகளை எம்பெட் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு பைலின் அளவு பெரியதாகும். மேலும் அனைத்து டி.டி.எப். எழுத்து வகைகளையும் எம்பெட் செய்திட முடியாது. சில எழுத்து வகைகளை உருவாக்கியவர்களே, அவற்றை எம்பெட் செய்திட இயலா வகையில் அமைத்திருப்பார்கள்.

மெனு செல்லாமல் பாண்ட் டயலாக் பாக்ஸ்
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும்.
ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.
குறிப்பிட்ட அகலத்திலான செல்களுடன் டேபிள்
வேர்டில் டேபிள் உருவாக்குவது எளிது. டேபிள் ஒன்றை இன்ஸெர்ட் கட்டளை கொடுத்து அமைக்கையில், செல் ஒன்றின் அகலம், கிடைக்கும் மார்ஜின் நீளத்தை, சரி சமமாக, நாம் அமைக்கும் செல்களின் எண்ணிக்கைக் கேற்றபடி அமைக்கப்படும். சில வேளைகளில், முதல் இரண்டு செல்கள் அல்லது மற்ற செல்கள் சிலவற்றில் அதிக அகலம் தேவைப்படலாம். எடுத்துக் காட்டாக, மார்ஜின் வெளியின் முழு நீளத்தில், 12 செல்கள் அடங்கிய ஒரு டேபிள் அமைக்கிறீர்கள். இதில் முதல் இரண்டு செல்கள்,சற்று அதிக அகலத்திலும், மற்ற 10 செல்கள் சரி சமமான அகலத்திலும் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான வழிமுறையைப் பார்ப்போமா!
1. முதலில் ஒரு படுக்கை வரிசை (onerow), மூன்று செல்கள் உள்ள டேபிள் ஒன்றை அமைக்கவும். இது மார்ஜின் வெளியில், இடது மூலையிலிருந்து வலது மூலை வரை,சரி சமமான அளவிலான செல்களுடன் அமைக்கப்படும்.
2. அடுத்து, முதல் இரண்டு செல்களில், கர்சரைக் கொண்டு சென்று, தலைப்பில் உள்ள செல் பார்டரை இழுத்து, தேவையான அகலத்தில் அமைக்கவும்.
3. அடுத்து மூன்றாவதாக உள்ள செல்லின் உள்ளாகக் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
4. பின்னர், டேபிள் மெனுவை விரித்து, அதில் Split Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இங்கு Split Cells என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
5. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தவும். அதில் இந்த செல் பத்து செல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் எனக் கொடுக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இரு பக்க ஒழுங்கு பாரா பிரச்னை
டாகுமெண்ட் தயாரிக்கையில், இரண்டு ஓர மார்ஜின் அளவிலும், வரிகள் சரி சமமாக அமையும் படி (justified) நீங்கள் அமைத்திருந்தால், நாமாக ஒரு புதிய வரி அமைக்க என்டர் + ஷிப்ட் அழுத்துகையில், சில சொற்களுக் கிடையே தேவையற்ற வகையிலும், பார்க்க சரியற்ற வகையிலும், சொற்கள் மற்றும் கேரக்டர்கள் பிரிக்கப்படு வதனைப் பார்க்கலாம். இந்தப் பிரச்னையை ஒரு மாய டேப் பயன்படுத்தித் தவிர்க்கலாம்.
இரு மார்ஜின் ஓரங்களிலும் சரி சம இணையாக பத்தி அமைய வேண்டும் என விரும்பி, தொடர்ந்து டைப் செய்து பத்தியை அமைப்போம். ஏதேனும் ஓரிடத்தில், பாரா முடிவுறச் செய்து, அடுத்த வரியினை அமைக்க வேண்டும் என எண்ணினால், நாமாக கண்ட்ரோல் + என்டர் தட்டுவோம். அப்போது, அதற்கு முன் உள்ள வரிகளில் உள்ள சொற்கள், வலது மார்ஜின் வரை வலுக்கட்டாயமாக இழுக்கப்படும். சொற்களில் எழுத்து சிதறியது போல இருக்கும். டாகுமெண்ட்டின் தோற்றத்தினை இது கெடுக்கும்.
இதனைத் தவிர்க்க, நாமாக வரி ஒன்றை அமைக்கும் முன்னர், ஒரு டேப் கேரக்டர் தட்டவும். அவ்வாறு செய்கையில், வேர்ட் அந்த வரியை மட்டும், இடது மார்ஜின் பக்கம் மட்டும் சீராக இருக்குமாறு அமைத்திடும். வலது மார்ஜின் பக்கம் எந்த விளைவினையும் ஏற்படுத்தாது.
வேர்ட்: ஆல்ட் கீ பயன்பாடு
Alt V, H – ஹெடரில் உள்ளதனைப் பார்க்க. பேஜ் லே அவுட் வியூவில் ஹெடரைக் காட்டும்
Alt, V, N– இது சாதாரணமான (Normal) அடிப்படைத் தோற்றத்தைக் காட்டும். இதே செயல்பாடு Alt + Ctrl + N என்ற கீகளை அழுத்துகையிலும் கிடைக்கும்.
Alt, V, O– அவுட் லைன் தோற்றத்தைக் கொடுக்கும். இதே செயல்பாடு Alt + Ctrl + O என்ற கீகளை அழுத்தினாலும் கிடைக்கும்.
Alt , V, P– ஏறத்தாழ அச்சில் என்ன தோற்றம் கிடைக்குமோ அதே போல தோற்றத்தைக் கொடுக்கும். இதனை எடிட் செய்யலாம். Alt + Ctrl +P என்ற கீகளை அழுத்தினாலும் இதே செயல்பாடு கிடைக்கும்.
Alt, W, A– ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறந்து செயல்படுகை யில் அவற்றை ஒழுங்குபடுத்தி திரையில் காட்சி தெரியும் படி அமைக்க இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget