நண்பர்களுக்கு வரும் இமெயில் செய்தி மற்றும் அவர்களுக்கு வரும் அனைத்து டெக்ஸ்ட் செய்திகளையும் நாம் இனி ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம். சில வரிகளில்
செய்தி வந்தால் மட்டும் தான் அடுத்தவர்கள் படித்து சொல்லுவார்கள்
அதிகமான அளவு செய்தி வந்தால் அவர்களும் படித்துச்சொல்ல
தயங்குவார்கள் இந்த நிலையை மாற்றி நமக்கு வரும் அத்தனை
செய்திகளையும் எளிதாக பேச சொல்லி கேட்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://beta.blindspeak.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நாம் பேச வேண்டிய வார்த்தையை கொடுத்து அங்கு
இருக்கும் Preview என்ற பொத்தானை அழுத்தினால் போதும்
அடுத்த சில நொடிகளில் நாம் டெக்ஸ்ட் ஆக கொடுத்ததை
பேசி காட்டுகிறது இந்ததளம் எந்த மென்பொருள் டூலும் இல்லாமல்
எளிதாக டெக்ஸ்ட்- ஐ பேச்சா மாற்றலாம். கண்டிப்பாக இந்ததளம்
பார்வையில்லாத நண்பர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும்
உதவும்.