பயர்பாக்ஸ் பூஸ்டர்

லை உலவிகளில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவி FIREFOX . இன்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தாலும் சில நேரம் வலை உலாவிகள் இணைய பக்கங்களை மெதுவாக தோன்றச்
செய்யும். ஏன் இப்படி மெதுவாக பதிவிறக்கம் ஆகின்றன என்று நமக்கு தெரியாது .

இன்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் இணைய தளங்கள் மித வேகத்தில் திறப்பதற்கு காரணம் இணைப்புக் கேற்றவாறு வலை உலாவிகளின் அமைப்புகளை மாற்றாமல் இருப்பதே காரணம் !!


ஒவ்வொரு வலை உலவிக்கும் தனித்தனியே அமைப்புகள் (CONFIGURATION) உள்ளடங்கியிருக்கும் . இதை நாம் அறிவதில்லை. சான்றாக FIREFOX-இன் அமைப்புகளைப் பார்க்க about:config என்று இணைய முகவரி அடிக்கும் இடத்தில் தட்டாசு செய்யவும் அதன் முக்கிய அமைப்புகள் வரும் .இவற்றை இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றும் போது வலை உலாவிகளின் வேகமும் அதிகமாகும் .ஆனால் தெரியாமல் ஏதாவது ஒன்றின் மதிப்பை மாற்றி விட்டால் சிக்கலாகிவிடும் அதையும் பார்த்து கொள்ளுங்கள்.
இதற்கெனவே ஒரு மென்பொருள் வந்துள்ளது .

இதன் பெயர் FIREFOX BOOSTER .

             

                   

இந்த மென்பொருளில் வைத்துருக்கும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை குறிப்பிட்டால் போதும் .இணைப்பிற்கு ஏற்றவாறு FIREFOX உலாவியை தயார்படுத்தும் . எந்த வகையான இணைப்பு மற்றும் இணைப்பின் வேகம் போன்றவற்றை வைத்து இந்த மென்பொருள் செயல்படுகிறது .
இந்த மென்பொருள் செயல்படும் போது FIREFOX உலாவியை மூடியிருக்கவேண்டும் .

இதை தரவிறக்க : FIREFOX BOOSTER 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget