ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள் . இதுப்போன்றவர்கள் , இணையத்தை நாடுவதே பாடலை கேட்கத்தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும் .
இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும் .ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.
என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறிர்களா இதோ அதற்க்கான ஒரு மென்பொருள்.
இதை பதிவிறக்க : வின்க்ரூவெஸ்
இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு , இந்த மென் ஒருங்கினை திறக்கவும் .
வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும் .
பின் SEARCH FOR MUSIC என்ற செக்பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறலாம் .