சுழலும் இன்டர்நெட்

இணைய வைய விரிவலை உலகை வளைத்து நம் கரங்களில் தரும் சாதனமாகும். உலகம் உருண்டை போல, இணையமும் சுழல்கிறதா? ஏன், சுழலச் செய்தால் என்ன! என்ற வேடிக்கையான எண்ணம்
சிலருக்கு ஏற்பட்டிருக்கும் போலத் தெரிகிறது. இதன் விளைவு, அவர்கள் இணையத்தையும் சுழல விட்டுள்ளனர். 
இதனால், நீங்கள் பார்க்கும் இணைய தளங்கள், உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரில், சுழன்று காட்சி அளிப்பதனைக் காணலாம். இது ஒரு வேடிக்கையான தளம். இதன் பெயர் Revolving Internet. இது ஒரு சிறிய இணைய தளம். இதன் முகவரி http://therevolvinginternet.com. இந்த தளத்தில் நுழைந்து பாருங்களேன். இதன் ஹோம் பேஜாக, கூகுள் சர்ச் இஞ்சின் உள்ளது. அது அப்படியே சுழல்வதனைக் காணலாம். கூகுள் சர்ச் இஞ்சின் என்றால், அதில் தளங்களைத் தேடிப் பார்த்தால் என்னவாகும்? என்று எண்ணத் தோன்றுகிறதா? செய்து பாருங்கள். அவையும் கடிகாரச் சுழற்சியில் மெதுவாகச் சுழலும். அப்படியே, கம்ப்யூட்டரில் மேற் கொள்ளும் அனைத்து வேலைகளையும், சுழன்ற படியே மேற்கொள்ளலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget