தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி?

ஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லை.  
ஆனால் இன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில்
பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.  இந்து பண்டிகைகள், திருமண தேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது.  என் அம்மாவுக்கு என் பிறந்த தேதி ஆங்கிலத்தில் சரியாகத் தெரியாது, தமிழ் தேதியை உடனே சொல்லி விடுவார்.

நம்ம ப்ரியாவோட கல்யாணமா அது மாசி 10ந்தேதி எனச் சொன்னால், நம்மிடம் 2011 நாட்காட்டி இருந்தால் ஆங்கில தேதியை தெரிந்து கொள்ளலாம் இல்லை புது நாட்காட்டி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.  இதுவே ஒரு தேதி என்ன கிழமை எனக் கேட்டால் கணக்கில் மேதாவியாக இருப்பின் ஒரு காகிதமும் பேனாவும் போதும், அல்லது கணிப்பொறியின் உதவியுடன் துல்லியாமாக சொல்லிவிட முடியும்.   


கணித சமன்பாடுகள் எதையுமே கணினியில் ஏற்றி வேலைகளை எளிமை படுத்த முடியும்.  ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக நிலை முதல் வின்னில் செலுத்தும் செயற்கைகோள் வரை அனைத்தும் கணிதம்தான் என்பதை அறிவோம்.  இந்த வரிசையில் ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியும், தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியையும் கணக்கிடும் சூத்திரம் தெரிந்தால் எளிதாக கணினியிலும் ஏற்றி விடலாம்.   இணையத்தில் இப்பணியைச் செய்து முடிக்க சில இணையதளங்கள் உள்ளன.  



http://www.prokerala.com/general/calendar/tamilcalendar.php
http://www.tamil-calendar.com  
http://www.barathonline.com/Articles/TamilCalendar2010.htm
http://tamildailycalendar.com/

கணக்கிடும் முறையை பெரும்பாலும் பகிர்ந்து கொள்ளப் படாததால் நிறைய நிரல்கள் நம்மிடம் இல்லை.  இது நமக்கு தெரிந்தால் டெஸ்க்டாப்பிலேயே தமிழ் நாட்காட்டி வைத்துக் கொள்ள இயலும், செல்பேசிகளில் பயன்படுத்தும் வண்ணம் சிறு மென்கலங்களை உருவாக்கலாம், இன்னும் நம் கற்பனை எல்லைகளை நீட்டிக் கொள்ள இயலும்.   இணையத்தில் எவ்வளவு தேடியும் தமிழ் தேதி கணக்கீட்டு முறையை அறிந்து கொள்ள முடியவில்லை.  இதனைக் குறித்து அறிந்தவர்கள் தகுந்த சுட்டியோ அல்லது விளக்கமோ அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget