உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில் உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன.
இதனால் நாளடைவில் உங்கள் கணணியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்து கொள்ள AUSLOGICS DUPLICATE FILE FINDER என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருள் மூலம் இலகுவாக கணணியில் உள்ள நகல் வீடியோ, படங்கள், புகைப்படங்கள், பாடல்கள் என அனைத்து கோப்புக்களின் நகல்களையும் கண்டறிய முடியும். இதன் மூலம் தேவையற்ற கோப்புக்களை நீக்கம் செய்து கொள்ளலாம். நீங்கள் நீக்க விரும்பாத கோப்புக்களை கணணியில் வைத்து கொள்ளவும் முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படவல்லது. இதன் அளவு 4.35MB ஆகும்.