வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வலைபதிவில் வாசகர்கள் சுலபமாக பதிவுகளை தேடி படிப்பதற்காக லேபில் சேர்த்திருப்பார்கள். ஆனால் வலைப்பதிவு அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லேபிலில் பின்னணியை
மறைக்க மறந்துவிடுகிறார்கள்.
லேபிலில் ஏதாவது
ஒரு keyword 'ஐ அழுத்தியவுடன் தோன்றும் பின்னணி நாம்
மறைக்க மறந்துவிடுகிறார்கள்.
லேபிலில் ஏதாவது
ஒரு keyword 'ஐ அழுத்தியவுடன் தோன்றும் பின்னணி நாம்
கீழே கொடுத்துள்ள படம் போலதான் உங்கள் லேபிளின் பின்னணியில் தோன்றும். அதை மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==> Design ==> Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள்.
<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>
பிறகு மேலே கொடுத்துள்ள கோடிங்கை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள கோடிங்கை சேருங்கள்.
<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>
பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் லேபில் பின்னணி மறைத்திருக்கும். நன்றி...