
வல்லமை பெற்ற கணணி தொழிநுட்ப துறையில் புதிய பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்களை போன்றே முன்மாதிரியாக ‘சிப்’ ஒன்றை
உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ‘சிப்’ ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயல் படுத்தக் கூடியன. சூழலை உணர்ந்து கொள்ளுதல், இலக்குகளைத் தெரிந்து கொள்ளுதல், சமுதாயத்துடன் தொடர்பு கொள்ளுதல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் போன்றவை இவர்களின் கண்டு பிடிப்புக்கான முக்கிய நோக்கம் என்று ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை புலனை அடிப்படையாக கொண்டு இதனை உருவாக்க பட்டுள்ளது
இதனை உருவாக்க 100 ஆராய்ச்சியாளர்களின் சுமார் 6 வருடங்களாக முயற்சி மேற்கொண்டனர். இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதி உதவி அளித்துள்ளது. ஐ.பி.எம் அமைப்பும் இதற்கு நிதி உதவி அளித்துள்ளது