நஞ்சுக்கு மருந்தாக பயன்படும் திருநீர்ப் பச்சை


வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரும் திருநீர்பச்சை சாலை ஓரங்களிலும் வீணாக இருக்கும் இடங்களிலும் அதிகமாக வளர்ந்திருக்கும்.
முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையதாகும். விதைகள், மலர்கள், இலைகள், வேர் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: போர்னியால், கற்பூரம், சிட்ரால்,சிட்ரோனெல்லால், யூகலிப்டால்,ஷொக்சனால், சைக்லோஹெக்சோன், யூஜினால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்தால், ஓசிமின், தைலம், மலர்கள், இலைகளில் இருந்து கிடைக்கும் டெரியேக்டியால். ஐசோகுவார் செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.


மருந்தாகும் தாவரம்: மணமிக்க இலைகள் கக்குவான் இருமலுக்கு பயன்படும். சாற்றினை மூக்கினுள் செலுத்த சளி கட்டுப்படும். படர்தாமரை நோயை குணப்படுத்தும்.


தேனுடன் கலந்து சூடாக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். மலர்கள் அஜீரணத்தைப் போக்கும். வேரானது காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும்.


கிருமி நாசினி: பூச்சிகளை அகற்றும், ஜூரத்தை குறைக்கும் கிருமி நாசினியாகும். அஜீரணத்தைப் போக்கும். நஞ்சுக்கு மாற்று மருந்தாகும். வியர்க்கச் செய்யும்.


பிசுபிசுப்பு தன்மை உடையது. வயிற்றுப்போக்கு, வலி, புண்கள், போன்றவற்றிற்கு பயன்படும். புண்கள், காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.


ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும்: சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகையாகும். இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்தோ அல்லது கஷாயம் செய்து கொடுக்க வாந்தி கட்டுப்படும்.


முகத்தில் விஷப் பருக்கள் தோன்றினால் அதற்கு திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் பரு காய்ந்து கொட்டிவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget