ஸோன் அலார்ம் புதிய பதிப்பு 2012


இலவச பயர்வால் அப்ளிகேஷன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு ஸோன் அலார்ம் 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.  இந்தப் புதிய பதிப்பில், பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக, மூன்று பெரிய ஐகான்களும் பாக்ஸ்களும் தரப் பட்டுள்ளன. முதல் ஐகான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்த விஷயங்களைக் கையாள்கிறது. 
நடுவில் இருக்கும் ஐகான் இன்டர்நெட் தொடர்பு குறித்து செட்டிங்ஸ் அமைக்க உதவுகிறது. மூன்றாவது ஐகான், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் அடையாளம், தகவல்கள் குறித்து இயங்குகிறது.
இதனைப் பதிந்து கொள்ள 5 எம்பி அளவிலான சிறிய புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். மற்ற பைல்கள், ஸோன் அலார்மின் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. இதுவரை ஸோன் அலார்ம் பயன்படுத்தாமல், விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் இந்த புதிய பதிப்பினைப் பயன்படுத்தலாம். நிறைய வசதிகள் விண்டோஸ் 7 தொகுப் பிற்கெனவே, அதனுடன் இணைந்து இயங்கும்படி தரப்பட்டுள்ளது. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget