தீபாவளி வளையத்திற்குள் திரிஷா-நயன்தாரா

இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என எந்த நடிகர்களின் படங்களும் ரிலீசாகவில்லை. தனுஷ் நடித்துள்ள கொடி,
கார்த்தியின் காஷ்மோரா இவைதான் இந்த தீபாவளியின் நேரடி போட்டி படங்கள். இவை தவிர சில படங்கள் பின்வாங்கி விட்டபோதும் மேலும் சில படங்களும் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. ஆனபோதும், எதிரும் புதிருமான பெரிய போட்டிப்படங்கள் என்கிற பரபரப்பு வளையத்திற்குள் இந்த படங்கள் சிக்கவில்லை. ஆனால், திரிஷா-நயன்தாராவை முன்வைத்து போட்டியை உருவாக்கி விட்டுள்ளனர்.

அதாவது, தற்போது இவர்கள் இருவருமே கதையின் நாயகிகளாக நடித்து வருவதோடு, அவர்களுக்கென்றும் ஒரு கமர்சியல் வேல்யூ இருப்பதால், தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நயன்தாரா படம் ஜெயிக்குமா? இல்லை திரிஷா படம் ஜெயிக்கும்? என்று கோலிவுட்டில் ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த இரண்டு படங்களின் பப்ளிசிட்டி பேனர்களை கதாநாயகர் களுக்கு இணையாக திரிஷா-நயன்தாராவின் படங்களும் பெரிய அளவில் இடம் பெறுகிறதாம். குறிப்பாக, காஷ்மோராவில் நடித்துள்ள நயன்தாராவுக்கு தனி கட்அவுட்டும் வைக்கப்படுகிறதாம்.

பழைய பதிவுகளை தேட