இடுகைகள்

மார்ச் 13, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற

படம்
இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.comஇதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அ...

உயிர் தோன்றி எவ்வளவு காலமாகிறது?

படம்
பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகியிருக்க வேண்டும் என்பதற்குத் துல்லியமான கணக்கு இல்லை. என்றாலும் ஏறத்தாழ 500 கோடி ஆண்டு களுக்கு முன்னால் பூமி தோன்றியிருக்கக்கூடும் என்று அறிவியல் முறைகளைக் கொண்டு அறிஞர்கள் ஊகிக்கிறார்கள். பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிரினங்கள் தோன்றிஇருக்க முடியும் என்று கணித்துள்ளனர். அதிலும் எடுத்த எடுப்பிலேயே இன்று உள்ளது போன்ற உயிரினங்கள் தோன்றி விடவில்லை. ஏறத்தாழ நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீரில் பாசி போன்றவை தோன்றின. இம்மாதிரி தோன்றியதற்கு அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததே காரணமாகும். சுமார் 50 கோடி ஆண்டுகள் கடந்தபிறகுதான் உயிர்த் தோற்றங்கள் பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் போன்ற கெட்டியான கூடுகளில் அவை வசிக்க ஆரம்பிக்க, மேலும் ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகின. பின்னர்தான் படிப்படியாக முறைப் படியான உயிரினங்கள் தோன்றி வளர்ந்தன.

விந்தையான விஞ்ஞான உண்மைகள்!

படம்
ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும். வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும். உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும். ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும். சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன. தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.