விந்தையான விஞ்ஞான உண்மைகள்!

ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது
வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget