மும்பை மச்சானுடன் நமீதா லவ்ஸ்!

நான் அவன் இல்லை,  அழகிய தமிழ் மகன், பில்லா, இளைஞன் போன்ற படங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை நமீதா. மார்க்கெட் இல்லாததால் வேறு தொழில் செய்யும் முடிவுடன் மும்பைக்கு சென்றவர், அங்கே கட்டுமான தொழில் செய்வதாக தெரிகிறது. நடித்து சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் போட்டு நமீதா லாபம் கண்டு
வருவதாக தெரிகிறது. நமீதாவுக்கும் மும்பையை சேர்ந்த இளம் வக்கீல் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாம். முன்னரே பரத்கபூர் என்றவருடன் நெருக்கமாக பழகி, இருவரும் திருமணப் பேச்சு வரை சென்று திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக பேசப்பட்டது. மும்பையில் நமீதா செய்து வரும் கட்டுமான தொழிலில் உதவியாய் இருப்பவர் தான் அவர் காதலிப்பதாக சொல்லப்படும் வக்கீல்.நிலம் வாங்குவது, விற்பது போன்ற அனைத்து தொழில் காரியங்களும் அந்த வக்கீல் மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. நட்பாக பழக அரம்பித்த நமீதா இப்போது காதல் வலையில் விழுந்துள்ளார். வாழ்க்கைத் துணைக்கு பொருத்தமானவர் அவர் தான் என்ற முடிவுக்கே வந்துவிட்டார் நமீதா.  

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget