த தர்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார் இந்தி நடிகை வித்யாபாலன். வித்யாபாலனும், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் சித்தார்த்ராய் கபூரும் ஓய்வுக்காக நியூசிலாந்து சென்றனர். அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கினர். பிறகு அங்கிருந்து குயீன்ஸ் ஸ்டஷனுக்கு புறப்பட்டனர். அப்போது திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்தன. இதில் வித்யாபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் தங்கி இருந்த இடங்களும் சேதமடைந்தன.
அவர் புறப்பட்ட சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வித்யாபாலன், சித்தார்த், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் இருவருக்கும் டெலிபோன் செய்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.