அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்


வரும் ஜூலை மாதம், உலக அளவில், குறைந்தது 3 லட்சம் பேர் இன்டர் நெட் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார் கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது. தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தினை அமைத்துள்ளது. இங்கு தங்கள் கம்ப்யூட்டர் வழியாகச் சென்று, தங்கள் கம்ப்யூட்டர், இத்தகைய மால்வேர்
வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம்.
டி.என்.எஸ். சேஞ்சர் (DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டாலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர். இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ், நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு, மேலும் சில லிங்க்குகள் தரப்படும். இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் திருடப் பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டாலர் என எப்.பி.ஐ. மதிப் பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ. இதற்கென அமைத்த இணைய தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள். ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணைய தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ. செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget