கழுகு திரை விமர்சனம்!


கொடைக்கானல் தற்கொலைப்பாறை, பள்ளத்தாக்கு பகுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் காதல் ஜோடிகள், கடன்காரர்கள் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... பிரச்னைக்கு உள்ளானவர்களின் பிணங்களை கீழேயிருந்து தூக்கி வந்து உரியவர்களிடம் உறவினர்களிடம் ஒப்படைத்து கஷ்ட ஜீவனம் நடத்தும் கதாபாத்திரம் ஹீரோ கிருஷ்ணாவினுடையது! டீ-த்தூள் பேக்டரியில் கூலி
வேலைக்குப்போகும் கேரக்டர் ஹீரோயின் பிந்து மாதவினுடையது! இந்த இருவருக்குமிடையே எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் காதல், வில்லன்களாலும், விதிவசத்தாலும் தோல்வியைத் தழுவ, சாவிலாவது ஒன்றாவோம்... என கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடியும் தற்கொலை பள்ளத்தாக்கில் சமாதியாவதுதான் "கழுகு" படத்தின் மொத்தக்கதையும்!


ஹீரோ கிருஷ்ணாவின் நடிப்பில் முந்தைய படங்களைக்காட்டிலும் நல்ல முன்னேற்றம்! நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா உள்ளிட்டவர்களுடன் தற்கொலைப் பள்ளத்தாக்கில் உயிரை விடும் பிணங்களைத் தூக்கி வரும் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். பிந்து மாதவியுடனான காதல் காட்சிகளிலும் நண்பர்களை நயவஞ்சகமாக கொன்ற வில்லன் ஜெயப்பிரகாஷ் அண்ட் கோவினருடன் மோதும் ஆக்ஷ்ன் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கிருஷ்ணா! கீப் கிட் அப் கிருஷ்ணா.


பிந்து மாதவி டீ - பேக்டரி தொழிலாளியாக டல் மேக்-அப்பிலும் டாலடிக்கிறார். பலே பலே! பிந்து மாதவியின் கவர்ச்சிகரமான கண்கள் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவதும் கழுகு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும். தன் காதல் தோல்வி அக்காவின் பிணத்தை தூக்கி வரும் கிருஷ்ணாவுடன் இருவருக்கு ஏற்படும் காதலும் காட்சிகளும் அழகாக உயிரோட்டமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவரது தோழியாக வரும் சுஜிபாலாவும் நச் என்றே தேர்வு!


சுஜிபாலாவின் கணவராகவும், கிருஷ்ணாவின் நண்பராகவும் வரும் கருணாஸ், தம்பி ராமையா, கிருஷ்ணா அண்ட் கோவினரின் காமெடிகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் சொல்லும் தத்துவ விநாடிகள்! ஆனால் அடிக்கடி அவர்கள் பிணங்களை பீஸ், பீஸ் என்பது வெறுப்பேற்றுகிறது.


யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்...!" தத்துவப்பாடலும் கழுகு படத்திற்கு பெரும் பலம்! சத்ய சிவாவின் இயக்கத்தில் வாழ்க்கை தத்துவத்தை சொல்லும் கழுகு, ஒருசில காட்சிகளில் தாழப்பறந்தாலும், ஒரு சில காட்சிகளில் உயர உயர பறந்து கழுகு எனம் பெயரை அழகாக காப்பாற்றியிருக்கிறது! 


ஆக மொத்தத்தில் "கழுகு" தமிழ் ரசிகர்களின் மனதை கரைக்கும் "மெழுகு!"

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget