XAMPP சேவையக மென்பொருள் 1.8.0


கணிணித்துறை பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் (server) எனப்படுகிறது. இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள்
பயன்படுத்தும் கணினியில் (உதாரணமாக: விண்டோஸ் 7) சேவையக மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம், ஆனால் இவற்றின் பயன்பாடு இணைய வடிவமைப்பு உருவாக்கத்தில் சோதனை செய்து கொள்ள அமைகின்றது. இம்மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு சாதரண கணினியை சேவையகமாக மாற்ற முடியாது, அப்படிப் பயன்படுத்தினாலும் அக்கணினி சுமையைத் தாங்காது என்பது அறியவேண்டியது ஒன்று.


மிகவும் பிரசித்தி பெற்ற விண்டோசுக்கான சேவையக மென்பொருள் XAMPP  ஆகும். இது இலவசமாகக் கிடைக்கின்றது. இதில் இரண்டு முக்கிய சேவையகம் உள்ளது:


php  நிரலுக்குரிய Apache சேவையகம் மற்றும் MySql தரவுத்தளத்துக்குரிய சேவையகம்.
 Size:78.04MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்