கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) ”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மகத், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான
சினேகாவும்-பிரசன்னாவும் ஆடி மாதமென்பதால் பிரிந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இருவரும் பிரிந்திருக்கும் இந்த சமயத்தில் சினேகா ”எனக்கு பிரசன்னாவுடன் மனைவியாக இருக்க விருப்பமில்லை” என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளும் சினேகாவின் பதில்களும் :-
“போன வருடமும் நீங்கள் பிரசன்னாவுடன் ஜோடியாக நடந்து வந்தீர்கள். இப்போது கணவன் மனைவியாக நடந்து வரும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?”
போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்.
“பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?”
பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்.
“கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்துல நீங்க இரெண்டு பேரும் ஜோடியா சிறப்பு தோற்றத்துல நடிக்கிறதா பேசிக்கிறாங்களே?”
அதுபற்றி இன்னும் முடிவாகல. பேசிகிட்டு இருக்கோம். முடிவு எடுத்ததும் கண்டிப்பா சொல்றேன்