சுயசுரிதை எழுதப் போறேன், அதனை சொந்தமாக படமாக்கப் போறேன் என்றெல்லாம் பயமுறுத்தி வந்த சோனாவின் அடுத்த அணுகுண்டு, திருமணம். தனது ட்விட்டர் செய்தியில் இந்த குண்டை வீசியிருக்கிறார். ஆண்களைப் பற்றி விதவிதமாக கமெண்ட் தரும் சோனா இந்தமுறை அறிவித்திருப்பது கொஞ்சம் முற்போக்கானது. டைவர்ஸ் ஆன ஒருவரை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக அதிக வயசுள்ள ஆளை தேடுகிறார்
என்று அர்த்தமில்லை. டைவர்ஸியாக இருந்தாலும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமாம். நமக்கென்னவோ ஆளை செலக்ட் பண்ணிவிட்டு அறிவிப்பு வெளியிட்டது போல் தெரிகிறது.