முற்றிலும் கவர்ச்சிகரமான அவதாரத்தில் கரீனா கபூர் காணப்படும் ஹீரோயின் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மது பண்டர்கர்.
இந்தியில் உருவாகியுள்ள படம்தான் ஹீரோயின். முதலில் ஐஸ்வர்யா ராய்தான் இதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கர்ப்பமாகி விட்டதால் நடிக்க முடியாமல் போய் பின்னர் கரீனா கபூர் ஒப்பந்தமானார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் வரலாறு காணாத கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல்
போஸ்டரை வெளியிட்டுள்ளார் மது.
இதில் கவர்ச்சிகரமான ஷிம்மரி டேங்க் டாப் உடையில், ஒரு படுக்கையில் மல்லாக்க படுத்துக் கிடக்கிறார் கரீனா. அவரைச் சுற்றிலும் ஏராளமான பத்திரிகைகள் கிடக்கின்றன. காலியான மதுக் கோப்பையும் அருகே கவிழ்ந்து கிடக்கிறது. இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மது, ரசிகர்கள் இதை ரசிப்பார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார். ஒரு இந்தி நடிகையின் கதைதானாம் இந்தப் படத்தின் கதை. செப்டம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறதாம்.