மாற்றான் ‌வெள்ளித் திரையில் - அதிகாரபூர்வ அறிவிப்பு


இன்றைய தேதியில் முக்கியமான பல படங்கள் ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளன. மாற்றா‌ன், விஸ்வரூப‌ம், சுந்தரபாண்டிய‌ன், பரதே‌சி, தாண்டவ‌ம், முகமூடி, கும்கி போன்றவை இவற்றில் சில. இதில் முகமூடி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதேசி அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் தெ‌ரிவித்திருக்கிறார்கள். மாற்றான் எப்போது வெளியாகும் என்பது தெ‌ரியாமல் இருந்தது. இப்போது ‌ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
அக்டோபர் 12 ஆம் தேதி மாற்றான் வெளியாகிறது. கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சுபா வசனம் எழுதியுள்ளனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். காஜல் ஹீரோயின். ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார்.

சூர்யா இதுவரை நடித்தப் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது மாற்றான் என்கின்றன தகவல்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்