
OpenOffice.org நிரலானது சுதந்திர மனப்பாங்கோடு உருவான மென்பொருள் ஆவணத்திட்டமாகும். இது பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்ததாக அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச் செயலித் தொகுப்பாக உள்ளது. இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறவூற்று ஆணையின் கீழ் APIகளாகவும் XML
சார்ந்த கோப்புப் படிவமாகவும் வழங்குகிறது.
OpenOffice.org என்பது , இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பை குறிக்கும். இது ஒரு பரிபூரண அலுவலக மென்பொருள் தொகுப்பாகும். இதில் உரைதொகுப்பு செயலி, விரிவுத்தாள், வழங்கல், வரையும் செயலி, ஹெச்டிஎம்எல் தொகுப்பி முதலியவை அடங்கும். இந்த அலுவலக மென்பொருள் தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்ககூடியது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற அலுவலக மென்பொருள் தொகுப்புகளுக்கு நிகரான தரத்தில் உள்ளது. ஆகையால் இது மற்ற விலைக்கு விற்கப்படும் அலுவலக மென்பொருள் தொகுப்புகளுக்கு ஒரு இலவச மற்றும் தரமான மாற்றாகவும் அமைகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
![]() |
Size:129.64MB |