
தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்யவிருக்கும் குழுவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வேந்தர் மூவீஸ் தயாரிக்க, வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, 'சென்னை 28' சிவா - இஷா தல்வார் நடிக்கும் படம் இது. தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார்.
பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார்.
இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள்.
படம் தொடங்கும் முன், தில்லுமுல்லுவின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் படத்தின் இயக்குநர் பத்ரியும், ஹீரோவாக நடிக்கும் சிவாவும்.
படத்தின் ஒரிஜினல் இயக்குநர் கே பாலச்சந்தர், உலகநாயகன் கமல் ஹாஸன் ஆகியோரும் இந்த ரீமேக் குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தில்லுமுல்லுவில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது