லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் சரிவில் இருந்த அவரது தமிழ், தெலுங்கு சினிமா மார்க்கெட் தடாலடியாக உயர்ந்து உச்சாணிக்கு சென்றது. இதன்காரணமாக தெலுங்கு படம் இயக்கும் வாய்ப்பினை பெற்ற லாரன்ஸ, அடுத்து காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இந்த நிலையில், காஞ்சனா இரண்டாம் பாகத்திலும் லட்சுமிராயே நடிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதேபோல் லட்சுமிராயும் ஏற்கனவே தன்னை மீண்டும் நாயகியாக்குவதாக லாரன்ஸ் முன்பே வாக்கு கொடுத்தது போலவும் பில்டப் கொடுத்து வருகிறார். ஆனால் இதுபற்றி லாரன்ஸை கேட்டால், எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறார். இப்போது கதை விவாதம்தான் நடக்கிறது. அதனால் இன்னும் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என்பது பற்றிய முடிவுக்கு வரவில்லை. அதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்கிறார்.