இந்திப் படத்தில் நடிப்பது எப்படி நடிகைகளின் லட்சியமோ அதற்கு சற்றும் குறையாத ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். பணம், புகழ் இரண்டும் இந்தியில் அமோகம். ஷங்கர் தனது முதல்வன் படத்தை அனில்கபூரை வைத்து நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் ப்ளாப். எந்திரன் தமிழ், இந்தி இரு மொழிகளில் வெளியாகி இந்தியிலும் வெற்றி கண்டது. இதுதான் ஷங்கரின் இந்தி பெல்ட் பற்றிய சுருக். வரலாறு.
தனது ஐ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் விரும்புவதாக தகவல். தமிழில் ஐ வெளியான பிறகே இந்த இந்தி ரீமேக். இந்தி நட்சத்திரங்களை தவிர்த்து மகேஷ் பாபுவை இந்த ரீமேக்கில் நடிக்க வைக்க ப்ரியப்படுகிறாராம். சென்ற வாரம் ஷங்கர், மகேஷ் பாபு சந்தித்துக் கொண்ட பிறகு இந்தி ரீமேக் குறித்து கொஞ்சம் உரக்கவே பேசுகிறது கோடம்பாக்கம்.
ஷங்கர் சார்... மேட்டர் உண்மையா?