Power Defragmenter - வன்தட்டை சீரமைக்கும் மென்பொருள்


வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை. வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில் கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும். வன்தட்டில் சேமித்த கோப்புகளை நாம் பயன்படுத்தும்போது கணினி ஆங்காங்கே சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.
இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு. இப்படி ஒவ்வொரு முறையும் நமது நேரத்தையும் கணினியின் ஆற்றலை குறைக்கும் இப்பிரச்சனைக்கு Defragemnt செய்வதுதான் ஒரே வழி. இந்த முறையில் நமது வன்தட்டில் பிரிக்கபட்ட பிரிவுகளான (C,D,E etc.,) போன்றவற்றை defragment செய்ய இயலும் .ஆனால் ஒரு File அல்லது Folder இதில் Defragment செய்ய முடியாது.

நமது கணினியின் வன்தட்டை Defragment செய்ய சிறந்த இலவசமான மென்மொருள் தான் Power Defragmenter. இதன் மூலம் நாம் ஒரு File அல்லது Folder defragment செய்து கொள்ளலாம். மிகவும் இலகுவான மென்பொருளான இது பயன்படுவதற்கும் எளிமையானது. இது மைக்ரோசாப்டின் Config என்னும் மென்பொருளை அடிபடையாக கொண்டு இயங்குகின்றது.இதனை கணினியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை. இது முற்றிலும் இலவச பதிப்பாகும்.

இயங்குதளம்: Win NT/2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:532KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget