
ஒரு படத்திற்கு தொடர்ந்து 10 நாள் நடித்துக் கொடுத்தால் அவருக்கு கிடைப்பது 1 கோடி. இது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பளத்தை விட அதிகம். இதனால் சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளை 2 அல்லது 3 நாட்களில் முடிக்கவே இயக்குனர்கள் முயற்சி செய்கின்றனர். தற்போது சந்தானம் போட்டிருக்கும் இந்த புதிய நிபந்தனையினால், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலங்கிப் போய் இருக்கின்றனர். 20 நாள் என்றால் சந்தானத்தின் சம்பளம் 2 கோடியா என்று அனைவரும் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதால், மீண்டும் அவரிடமே செல்கின்றனர்.
சந்தானத்தை ஒதுக்கியவர்கள் எல்லாம், இன்று அவரது கால்ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர். இந்த வரிசையில் சில முன்னணி இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.