புதிய அம்பை எய்யும் சோனா!


கவர்ச்சி நடிப்பில் கரை கண்ட நடிகை சோனா அடுத்து இசையமைப்பாளராக மாறிப் போவதாக அறிவித்து, புதிதாக வரும் நிலம் புயலுக்கு இணையாக ரசிகர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
தானே கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்தில்தான் இந்த இசைஅவதாரத்தை எடுக்கப் போகிறாராம். இதற்கு முன்னோட்டமாக ஒரு ஆல்பத்துக்கு இசையமைப்பதில் மும்முரமாக உள்ளாராம். அதனை விரைவில் வெளியிடவும் போகிறாராம்.


கனிமொழி படத்தைத் தயாரித்ததில் ஏற்பட்ட நஷ்டம், நட்பு வட்டாரம் செய்த துரோகம், வீட்டுத் தகராறு என ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி புண்பட்ட மனதை, இசை விட்டு ஆற்றும் முயற்சியாகவே இதனைச் செய்கிறாராம் அம்மணி. அதுமட்டுமல்ல, தன் சொந்தக் குரலில் பாடவும் செய்கிறாராம்.

அய்யோ... தமிழ் சினிமா இசைக்கு இன்னும் என்னவெல்லாம் சோதனைகள் காத்திருக்கின்றனவோ!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget