இது மிக வேகமாக இயங்கி, எந்த பைல் அல்லது போல்டர் அதிக இடம் பிடித்துள்ளது என்று காட்டும். இதனை ஒரு மேப் போல காட்டுவதால் ட்ரீ சைஸ் புரோகிராம் காட்டும், வரைபடத்தைக் காட்டிலும், வேகமாக நாம் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ற வகையில், ஒவ்வொரு ட்ரைவ் மற்றும் போல்டருக்கான பெட்டிகள் காட்டப்படுகின்றன.
அதே போல், ஒவ்வொரு வகையான பைலுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பெட்டிகள் உள்ளன. மஞ்சள் வண்ணம் சிஸ்டம் பைல்களுக்கு, நீல வண்ணம் ஆர்க்கிவ் மற்றும் டிஸ்க் இமேஜ் பைல்களுக்கு என உள்ளன. நாமும் நமக்கு தெளிவாகத் தெரியும் வண்ணத்திற்கு இந்த கட்டங்களின் வண்ணத்தினை மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி முதல் தற்போது வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7
Size:1.51MB
|