ஹாலிவுட்டை தூள் தூளாக்கிய துப்பாக்கி


சமீபத்தில் எந்த தமிழ்ப் படமும் யுஎஸ்-ஸில் இரண்டு கோடியை எட்டவில்லை. அதனை துப்பாக்கி முறியடித்திருக்கிறது. வெளியான நாளிலிருந்து துப்பாக்கி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் வேட்டை தொடர்கிறது. யுகே-யில் துப்பாக்கி இரண்டாவது வார இறுதியில் 26,133 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதிவரை வசூல் நிலவரம் 3,06,468 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 1.68 கோடிகள். இந்த வருடம் எந்தத் தமிழ்ப் படமும் இப்படியொரு வசூலை பெற்றதில்லை.
யுஎஸ்-ஸில் இரண்டாவது வார இறுதிவரை அதாவது சென்ற வார இறுதிவரை 4,52,734 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சுமார் 2.51 கோடிகள். யுஎஸ்-ஸிலும் இப்படியொரு வசூலை ஒரு தமிழ்ப் படம் இந்த வருடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது முக்கியமானது. ஆஸ்‌ட்ரேலியாவில் இப்படம் சென்ற வார இறுதிவரை 46.73 லட்சங்களை வசூலித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்