
இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிற 28-ந்தேதி வருகிறது. அன்றைய தினம் சமர், கோழிகூவுது, அகிலன், பத்தாயிரம் கோடி, லொள்ளு தாதா பராக் பராக், காதல் காவியம், கண்டுபிடிச்சிட்டேன், பாரசீக மன்னன் ஆகிய 8 படங்கள் ரிலீசாகின்றன. இவற்றில் சமர் பெரிய பட்ஜெட் படமாகும். விஷால், திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். திரு இயக்கியுள்ளார். ஆக்சன் படமாக தயாரகியுள்ளது. லொள்ளு தாதா பராக் பராக் படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்துவட்டியை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார்.
கோழி கூவுது படத்தில் அசோக் நாயகனாக நடித்துள்ளார். பத்தாயிரம் கோடி படத்தை முக்தா சீனிவாசன் தயாரித்துள்ளார். இதில் விவேக் போலீஸ் அதிகாரி கேரக்டரில் வருகிறார். அரசியல் தரகர் நீரா ராடியா கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். மேலும் 6 படங்கள் ஜனவரி 4-ந்தேதி ரிலீசுக்காக காத்து இருக்கின்றன.