
Richard Yates எழுதி 1961ம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே இந்த திரைப்படம். லியனாடோ டிக்காப்பிரியோ, கேட் வின்ஸ்லட் (நம்ம டைட்டானிக் ஜோடி) நடித்திருந்தமையால் பெரும் எதிர்பார்ப்பையும் இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தமை குறிப்படித்தக்கது. 1954 ஒரு தம்பதியர் தமது மகனுடனும், மகளுடனும் ரெவலூசனலி ரோட் எனும் இல்லத்திற்கு வருவதில் இருந்து கதை ஆரம்பமாகின்றது. இந்தக் கதை திருமணமான இளவயது கணவன்
மனைவிக்கிடையில் ஏற்படும் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், சலிப்புகள், கேபங்கள் போன்ற உணர்வுகளை சித்தரிக்கும் திரைப்படம். உண்மையைத் தேடப்போய், அதன் அருகாமையில் சென்று பின்னர் சாதாரணமான மக்கள்போல வாழ்க்கை வெள்ளத்தில் தம்பதியர் அடிபட்டுப் போவதுதான் மிகுதிக் கதை.
டிக்காப்பிரியோ நடிப்பில் அருமை. கோபம் கொண்டு சீறும் போது அப்படியே எங்களைக் கூடப் பதற வைக்குமளவிற்கு நடிக்கின்றார். கேட் வின்ஸ்லட்டின் நடிப்போ சில இடங்களின் டிக்காப்பிரியோவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இறுதிக் கட்டங்களில் அமைதியாக கணவருடன் உரையாடி அவரை அனுப்பிவிட்டு தன் வேலை செய்யும் போது நடிப்பு 100 வீதம் தத்ரூபம். பெண்கள் மனதளவில் காயப்ப்பட்டு, மனதில் ஒன்றை வைத்து வெளியே முகத்தில் நடிப்பாக புன்னகையைக் காட்டும் போது இருக்கும் அதே முகம். அருமை!!!!
டிக்காப்பிரியோ அலுவலகத்தில் வேலைசெய்யும் பணிப்பெண்ணுடன் உறவு கொள்கின்றார், பின்னர் அதை மனைவியிடம் சொல்லுகின்றார். அப்போது மனைவி ஏன் இதை எனக்கு இப்போ சொல்கிறாய்? நான் பொறாமைப் படவேண்டும் என்று நினைக்கின்றாயா என்று கேட்பது நச்!!!
ஆனால் எதற்காக கேட் (வீலர்) பக்கத்துவீட்ட நபரை உசுப்பேத்தி உடலுறவு கொள்கின்றாரோ தெரியவில்லை. ஒரு முறைதான் செய்தார் என்றாலும் எதுக்கு செய்தார் என்று புரியவில்லை. யாராவது புரிந்த மக்கள் இருந்தால் சொல்லுங்கள்.
இந்த திரைப்படத்தை இயக்கியவர் Sam Mendes. இவர்தான் கேட் வின்ஸ்லட்டின் கணவர் என்பதும் அமெரிக்கன் பியூட்டி எனும் திரைப்படத்தை எடுத்து ஒஸ்கார் வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்திற்கு ஏற்ற கதை என்பதை விட புத்தகத்தில் வாசிப்பதற்கு சிறந்த கதை. திரைப்படம் பார்த்து முடித்தபின்னர் ஒரு திரைப்படம் பார்த்தோம் என்பதை விட ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தோம் என்ற ஒரு உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. நடிகர்களின் சிறப்பான நடிப்பிற்காக பார்க்க கூடிய திரைப்படம்.