விஸ்வரூபம் படத்தை ஏர்டெல் டி.டி.எச்.-ல் காணலாம்!


தியேட்டரில் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்., சேவையில் காணலாம். அதற்கான சேவையை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாய் தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடும் புதிய திட்டத்திற்கு கமல் வழிவகுத்துள்ளார்.
இந்த புதிய திட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்களும், கேபிள் ஆபரேட்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் தயாரிப்பாளர் சங்கம் கமலுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கமலின் புதிய திட்டத்தை கேட்டு பிரபல டி.டி.எச்., நிறுவனங்களான டாடா ஸ்கை, டிஸ் டி.வி., ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிப்பரப்ப முன்வந்தனர். இதில் கடைசியாக அந்த உரிமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் ஏர்டெல் டி.டி.எச். சேவை உள்ளவர்கள் விஸ்வரூபம் படத்தை வீட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும். இதனிடையே விஸ்வரூபம் படத்தை வெளிநாடுகளிலும் டி.டி.எச்.-ல் திரையிட பேச்சுவார்த்தை நடக்கிறது. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget