
காஜல் அகர்வாலிடம் நீங்கள் யாரோ ஒரு நடிகரை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறதே? என்று கல்லெறிந்தால், காதலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தால் பிடித்தமான நபரை வெளிப்படையாகவே காதலிப்பேன். திருட்டுத்தனமாக காதலிப்பது எனக்கு பிடிக்காது என்று பளிச்சென்று பதில் சொல்கிறார். அதோடு, எல்லோரையும் போலவே எனக்கும காதலிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னைக் கவர்ந்த நபர் இதுவரை என் கண்ணில் படவில்லை. அதோடு சினிமாவிலும் பிசியாக இருப்பதால்
அதற்கான தேடலும இப்போது என்னிடம் இல்லை என்கிறார்.
மேலும், எனது கணவராக வரப்போகிறவரை சினிமா உலகை விட்டு வெளி உலகத்தைச் சேர்ந்தவரையே தேர்வு செய்வேன் என்று சொல்லும் காஜல், சினிமாத்துறையினர் என்றால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்து விவாகரத்து வரை சென்று விடுகிறது. பல நடிகைகள் வாழ்க்கையில் இதுபோன்று நடப்பதால், சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத யாராவது தொழிலதிபரை திருமணம் செய்வேன். அப்படி நான் திருமணம் செய்யும் நபர் எனது பெற்றோரே தேர்வு செய்தாலும் பிடித்திருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்வேன் என்கிறார் காஜல் அகர்வால்.